வேலூர் :துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
மாநில அளவிலான நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரின் மகன் என்ற எண்ணம் இல்லாமல் பணியாற்றுகிறார்.
துரைமுருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் என்று அவர் மக்களுக்காக பணியாற்றுகிறார். அதனுடைய விளைவு இளைஞர் அணியிலே மகத்தான பெயர் பெற்றார். பழம்பெறும் சட்டமன்ற உறுப்பினரை போல் தொகுதி பணியாற்றி வருகிறார்.
அதனுடைய விளைவு இன்றைக்கு தமிழகத்தின் இளம் வயதிலே முதல் முதலாக ஒரு துணை முதல்வர் வந்திருக்கிறார். அவரை நாங்கள் இன்றைக்கு பாராட்டுகிறோம். வயலில் உள்ள நாற்றங்காலில் பயிர் என்னதான் செழிப்பாக இருந்தாலும் அதனாலே கதிர் போகாது, கதிர் போனாலும் பலன் இருக்காது.
அந்த நாற்றை பிடுங்கி வயலிலே நட்டால்தான் பயிர் வளரும். மணி, மணியாக நெல்மணி குவியும். அதேபோல் நீண்ட காலம் அந்த பயிர் நாற்றங்காலில் இருந்தால் அந்த பயிர் அழுகிப்போகும். அதே போல் தான் மாணவரணி இளைஞர் அணி என்ற நாற்றங்காலில் இருந்து என்னைப் போன்றோர் எல்லாம் அதுபோல் இருந்து நல்ல மணிகள் தரும் பயிர்களாக மாறி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க :"அரசியல் சரிபட்டு வராது என துணிந்து முடிவெடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன்" - நூற்றாண்டு விழாவில் ரஜினி புகழாரம்!
அப்படிப்பட்ட ஒரு மணி தான் துணை முதல்வர் என்ற பதவியை அளித்திருக்கிறார்கள். எனவே அவருடைய பணியை பார்த்தால் ஒரு நாள் கூட ஓய்வு, உறக்கம் இல்லை. நாள்தோறும் பறந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் மகன் நான் ஏன் போய் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு கிடையாது.
தலைமைக்கு தொண்டன் நான் கழகத்தை வளர்க்க தமிழகத்தில் எட்டு தித்திக்கும் போகிறேன் என பாய்ந்து கொண்டிருக்கிறார். இது போன்று ஒரு துணை முதலமைச்சரை தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, அவருக்கு வாழ்த்துக்கள்.
முன்னதாக, தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல், இந்த 2 கட்சிகளாலும் வெற்றி பெற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள், அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் கொடுத்தது இல்லை என பதிலடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவ்விழாவினை முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியார்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அமைச்சர், அவர்கள் இரண்டு பேரும் அவர்களுடைய பார்வையை கூறி விட்டார்கள். என் பார்வை தேவையில்லை என்றார்.
அமைச்சர் பெரியசாமியின் பதில் எம்பி திருமாவளவனுக்கும் சேர்த்தா என்ற கேள்விக்கு, அதை பெரியசாமியை தான் கேட்கணும். வேலூர் மாவட்டம், பிரிக்கப்பட்ட பின்பு கோடை விழா இதுவரையில் நடைபெறாமல் இருக்கிறது. இனி கோடை விழா நடைபெறுமா என்ற கேள்விக்கு, அதற்கான ஏற்பாடுகளை விரைவில் அறிவிக்கிறேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்