சென்னை: சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், குழந்தைகளிடையே சாதி வேறுபாடுகளை களைவதற்கு கொடுக்கப்பட்ட நீதிபதியின் அறிக்கை மிகவும் சென்சிடிவ் நிறைந்ததாகவும், பலரின் நம்பிக்கையை பாதிக்கும் விதமாக உள்ளது. சாதிய பிரச்சினையை களைவதற்கு புற அடையாளத்தை களைவதற்கு முயற்சி எடுக்கின்றனர். அகத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, மாணவர்கள் கையில் சில அடையாளம் அணிந்து செல்வது, அதனால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கவே நீதிபதி அறிக்கை இருக்கும் என நம்புகிறேன். எனக்கு தெரியவில்லை, இங்கிருந்து வெளியே செல்லும் போது தவறுதலாக சென்று விடக்கூடாது என்று கூறினார். கோயம்புத்தூருக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என தெரிவிப்பார். ஆனால், கோவைக்கு 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.