சென்னை :தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பள்ளிகள், நூலகங்களை ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 234/77 என்ற ஆய்வு பயணத்தைத் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தொடங்கினார்.
ஒவ்வாெரு சட்டமன்றத் தொகுதிக்கும் செல்லும் போது பள்ளிகள், நூலகம், பள்ளிக்கல்வித் துறையின் அலுவலகங்களில் 77 கேள்விகள் அடங்கிய படிவத்தில் ஆய்வினை செய்தார். பள்ளிகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து 2024 நவம்பர் 14 தமிழ்நாடு முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்தார்.