சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சிலம்பம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பளு தூக்குதல், தடகள விளையாட்டுக்கள், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மட்டும் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற முடியும்.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஆவடியை சேர்ந்த கராத்தே சாம்பியன் அருண் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.