சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில், திமுக சார்பில் வேட்பாளர் செங்குட்டுவனும், அதிமுக சார்பில் வேட்பாளர் கே.அசோக் குமாரும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அப்போது, 605 தபால் வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், தேர்தல் அதிகாரியில் உத்தரவை ரத்து செய்து நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தப் பதிவாளரை நியமிக்க வேண்டும் என அந்த தொகுதி போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது, "உரிய காரணமின்றி அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யத் தேர்தல் வாக்குகளைத் தபால் வாக்குகளைச் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். நிராகரிப்பதற்கு முன் வேட்பாளர்களிடம் காரணங்களைத் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டே அதிமுக வேட்பாளர் வெற்றி பெறத் தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளார். தனக்கும் அதிமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் 794 தான் என இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.