தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனை தடுப்பு நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி ஆணை - Madras High Court - MADRAS HIGH COURT

பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் (Tobacco) விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Photo Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 6:25 PM IST

சென்னை: சென்னை, வியாசர்பாடி மற்றும் கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், ஆய்வக பராமரிப்பின்மை குறித்தும், பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த பள்ளியை ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவும், ஆய்வகங்களை முறையாக பராமரிக்கவும், பள்ளி வளாகத்தைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:சிறுவனை தாக்கிய வழக்கு; பின்னணிப் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்!

ABOUT THE AUTHOR

...view details