சென்னை: கூகுள் இணையத்தில் ஆபாச வலைத்தளங்களுக்கான பரிந்துரைகள் வருவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 'இணைய பயன்பாட்டாளர்கள் கூகுள் தேடுதலில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து சில தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரத்தை பிரபலப்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. இதை சில தவறான நபர்கள் ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளை விளம்பரப்படுத்துகின்றனர்.
இந்த ஆபாச புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அபாயம் உள்ளது' என மனுவில் தெரிவித்துள்ளார்.