தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு விவகாரம் - தமிழக அரசுக்கு கெடு வைத்த நீதிமன்றம்! - TN Govt Doctors Salary Hike Issue - TN GOVT DOCTORS SALARY HIKE ISSUE

TN Govt Doctors Salary Hike Issue: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 8:27 AM IST

சென்னை:மத்திய அரசு மருத்துவர்களுக்கும், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 2009 செப்டம்பர் 23ஆம் தேதி அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்தது.

தொடர்ந்து, இந்த அரசாணையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க 2024 ஜனவரியில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், காலம் சார்ந்த ஊதியம் வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த மறுப்பு தெரிவித்து, 2024 மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 6 அரசு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, ஊதிய உயர்வு வழங்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழ் விசாரணைக்கு வந்தது. அதில், அரசு மருத்துவர்கள் சார்பில் வழக்கறிஞர் கவுதமன் ஆஜராகி வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களை இடிக்கும் அரசின் நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details