தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 9:33 PM IST

ETV Bharat / state

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு; முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கு குறித்து போலீஸ் பதிலளிக்க உத்தரவு..

Ex Special DGP Rajeshdass move exemption of surrender of molested case: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைய விலைக்குக்கோரித் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-notice-to-police-response-for-ex-spl-dgp-rajeshdass-move-exemption-of-surrender-of-molested-case
பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு; முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கு குறித்து போலீஸ் பதிலளிக்க உத்தரவு..

சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைய விலக்குக் கோரித் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பிக்கு பாலியல் தொலை அளித்தது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ். பி.க்கு பாலியல் தொலை அளித்தது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சரணடைவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ். ராஜ்குமார், மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்; சமுதாய வானொலி துவக்க விழா ரத்து? என்ன சொல்கிறார் துணைவேந்தர்?

ABOUT THE AUTHOR

...view details