சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், 'போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தது சட்டவிரோதம்' என உத்தரவிடக் கோரி ஜாபர் சாதிக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்டபட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி,
'ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து நீதிமன்றக் காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதோடு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என்று வாதிட்டார்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு; மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்!