தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவு! - kallakurichi school girl death case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 6:35 PM IST

kallakurichi school student death: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தின் போது நடந்த கலவரம்

சென்னை:கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், சம்பவம் நடந்து 20 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விசாரணையை சிறப்பு புலன் விசாரணைக் குழுவிடம் இருந்து வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என பள்ளி தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்.30) உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி ப்ளஸ் 2 மாணவி, கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை 13 ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2022 ஜூலை 17ம் தேதி மாணவி மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர். இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்பிற்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சம்பவம் நடந்து 20 மாதங்கள் கடந்தும், மாணவியின் தாய் மற்றும் வன்முறையை தூண்டியவர்கள் எவரையும் விசாரணை செய்யவில்லை என்றும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தனால் கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிறப்பு புலன் விசாரணைக் குழுவிடம் இருந்து வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மனுவிற்கு பதிலளிக்கும்படியும், சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சின்ன சேலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: மதுபோதையில் வளர்ப்பு நாய் இரும்பு ராடால் குத்திக்கொலை.. சென்னையில் கொடூரம்! - Dog Murder

ABOUT THE AUTHOR

...view details