சென்னை: அரசு தரிசு நிலங்கள், நீர்நிலைகள் பட்டா போட்டு திமுக முன்னாள் எம்.பி. மற்றும் திரைப்பட இயக்குநரின் உறவினர்களுக்கு மாற்றப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளதாக நில நிர்வாக ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிலம்பநாதன் பேட்டை ஊராட்சியில், அரசிற்குச் சொந்தமான சுமார் 180 ஏக்கர் தரிசு நிலத்தை, எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவுசெய்து கொடுத்துள்ளதாக கூறி, சிலம்பநாதன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சிங்காரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தரிசு நிலம், வனப்பகுதி, கிராம நத்தம், நீர் நிலை ஆகிய நிலங்கள் நில நிர்வாக ஆணையரின் அனுமதி இல்லாமல் பட்டா நிலமாக மாற்றி, முன்னாள் திமுக எம்.பி. ரமேஷ், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.