சென்னை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பாபநாசம் (திருநெல்வேலி) 6, சேர்வலாறு அணை (திருநெல்வேலி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 4, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 3, மணிமுத்தாறு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2, சூரங்குடி (தூத்துக்குடி) 1, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) 1, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), போடிநாயக்கனூர் (தேனி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), கமுதி (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 1.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37° – 40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19° –29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.2° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 39.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஏப்.16:தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.17: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.18 மற்றும் ஏப்.19: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.