தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN Rain Update - TN RAIN UPDATE

TN Rain Update: இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை கோப்புப்படம், IMD Tamil Nadu
மழை கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu & IMD Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:26 PM IST

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாவட்டம் மழை அளவு (சென்டிமீட்டரில்)
மைலாடி (கன்னியாகுமரி) 7 சென்டிமீட்டர்
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நன்னிலம் (திருவாரூர்) 6 சென்டிமீட்டர்
கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கொட்டாரம் (கன்னியாகுமரி), UPASI AWS (கோயம்புத்தூர்) 5 சென்டிமீட்டர்
காயல்பட்டினம் (தூத்துக்குடி) 4 சென்டிமீட்டர்
விரகனூர் அணை (மதுரை), நாகர்கோயில் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பாம்பன் (ராமநாதபுரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), விழுப்புரம் (விழுப்புரம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சங்கரன்கோயில் (தென்காசி) 3 சென்டிமீட்டர்
கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), கடனா அணை (தென்காசி), வீரபாண்டி (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்), சிவகிரி (தென்காசி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), குழித்துறை (கன்னியாகுமரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), ராஜபாளையம் (விருதுநகர்), வேப்பூர் (கடலூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சிற்றாறு-I (கன்னியாகுமரி), லால்பேட்டை (கடலூர்), திருவாரூர் (திருவாரூர்), பெலாந்துறை (கடலூர்) 2 சென்டிமீட்டர்
கோடியக்கரை (மயிலாடுதுறை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), காட்டுமயிலூர் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), நீடாமங்கலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), கிளன்மார்கன் (நீலகிரி), மண்டபம் (ராமநாதபுரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கயத்தார் (தூத்துக்குடி), கல்லந்திரி (மதுரை), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பாண்டவரடி (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), மீ மாத்தூர் (கடலூர்), காக்காச்சி (திருநெல்வேலி), திருநெல்வேலி (திருநெல்வேலி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), தொழுதூர் (கடலூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), முக்கடல் அணை (கன்னியாகுமரி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), காரைக்கால் (காரைக்கால்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), சிட்டம்பட்டி (மதுரை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), கீழச்செருவை (கடலூர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), சோழிங்கநல்லூர் (சென்னை), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), திருமானூர் (அரியலூர்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு) 1 சென்டிமீட்டர்

அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 28.1 டிகிரி செல்சியஸ் (-10.3 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 29.3 டிகிரி செல்சியஸ் (-8.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மே 17 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே-18 ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மே-19 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மே-20ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மே-21ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

மே 22ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து மே 23ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:மே 17 முதல் 21 ஆம் தேதி வரையில்,அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பு நிலை அல்லது இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26டிகிரி முதல் 27டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மே 17 ஆம் தேதி, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 18ல் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 19 முதல் 21 வரையில், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இதையும் படிங்க:அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை! - Met Update

ABOUT THE AUTHOR

...view details