தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 12:57 PM IST

ETV Bharat / state

சென்னையில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.6 லட்சம் கொள்ளை! - ATM Robbery in Chennai

ATM Robbery in Chennai: சென்னை விமான நிலையம் அருகே தனியார் வங்கி ஏடிஎம்மில் ரூ.6 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ATM Robbery in Chennai
ATM Robbery in Chennai

சென்னை: பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏடிஎம்களில் ஒன்று, மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரே அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்-ல் பணம் நிரப்புவதற்காக, நேற்று முன்தினம் ஊழியர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், ஏடிஎம்-ல் பணம் இருப்பது போன்று கணக்கு காண்பித்த நிலையில், அதற்குள் பணம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த பணம் நிரப்பும் ஊழியர்கள் இது குறித்து பல்லாவரத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், அதில் பணம் இருப்பது போன்று காண்பித்துள்ளது. இதனையடுத்து, ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தலில், ஏடிஎம் இயந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, நூறு ரூபாய் எடுத்தால் 500 ரூபாய் வருவது போல் செட்டிங்கில் மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, உடனடியாக ஏடிஎம்-ல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில், கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் ஏடிஎம்மிற்கு வந்த மர்மம் நபர்கள் செட்டிங்கில் மாற்றம் செய்து, நூதன முறையில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனால், வங்கி மேலாளர் ராஜதுரை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் வங்கியின் ரகசிய கோடு எண், பின் எண் ஆகியவைகள் தெரிந்துள்ளது. எனவே, வங்கியோடும், பராமரிப்பு இயந்திரங்களோடும் தொடர்புடையவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நூதன முறையில் ஏடிஎம்-ல் கொள்ளையடித்துள்ள சம்பவம் குறித்து பல தரப்பினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காஞ்சிபுரத்திலும் இது போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்! - LOK SABHA ELECTION 2024

ABOUT THE AUTHOR

...view details