தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் காலியிடத்திற்கு 'மாப் ஆப்' கவுன்சிலிங் அறிவிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான 3வது சுற்றுக் கலந்தாய்விற்கு (மாப் ஆப் MOP-UP) இன்று முதல் 11 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு அறிக்கை, மருத்துவம் தொடர்பான கோப்புப் படம்
அறிவிப்பு அறிக்கை, மருத்துவம் தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 9:31 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான 3 சுற்றுக் கலந்தாய்விற்கு (மாப் ஆப் MOP-UP) இன்று அக்.9 முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும், 12 முதல் 14ஆம் தேதிக்குள் மாணவர்கள் விரும்பும் கல்லூரியை இறுதி செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில்

1.பிடிஎஸ் படிப்பில் தமிழ்நாடு அரசுப் பல் மருத்துவக்கல்லூரியில் ஒரு இடமும்.

2.புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரியில் 2 இடமும்.

3. 5 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 5 இடங்களும் காலியாக உள்ளது.

எம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு:எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில்

1.17 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 32 இடங்களும்.

2.கேகே நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரியல் ஒரு இடமும் காலியாக உள்ளது.

3.21 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 103 இடங்களும்.

4.மேலும் நிர்வாக ஒதுக்கீட்டில் 346 இடங்களும் காலியாக உள்ளது.

அதில் 4 தனியார் பல்கலைக் கழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் 47 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 152 இடங்களும் காலியாக உள்ளது.

பிடிஎஸ் இட ஒதுக்கீடு:

1.பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 3 அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் 62 இடங்களும்.

2.தனியார் பல் மருத்துவக்கல்லூரிகள் 20ல் அரசு ஒதுக்கீட்டில் 103 இடங்களும்.

3.நிர்வாக ஒதுக்கீட்டில் 504 இடங்களும் காலியாக உள்ளது.

4.மேலும் வேலூர் கிருஸ்துவ மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும் காலியாக உள்ளது.

கலந்தாய்வின் முடிவுகள்:மேலும் மாணவர்கள் தேர்வு செய்த இடங்களுக்கான ஒதுக்கீடு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் முடிவுகள் அக். 17ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அக்.17ஆம் தேதி முதல் அக்.23ஆம் தேதி மதியம் 12 மணி வரை அதற்கான உத்தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:"இப்படித்தான் துணி துவைக்கணுமா?" - மதுரை மாணவர்களிடம் வாழ்க்கைக் கல்வி கற்ற ஆஸ்திரேலிய மாணவர்கள்!

இதில் மருத்துவ இடங்களை தேர்வு செய்தவர்கள் அக்டோபர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வில் இடங்களை தேர்வுச் செய்து ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெறுபவர்கள் கட்டாயம் கல்லூரியில் சேர வேண்டும். அவ்வாறு சேராதவர்களின் வைப்புத்தொகை திருப்பித் தரப்படாது எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details