மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில், ஆண்டுதோறும் வைகாசியில் 11 நாட்கள் குருபூஜை விழா, பட்டினப் பிரவேச விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தருமபுர ஆதீன மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா மே 20ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்க உள்ளது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பதினோராம் நாள் திருவிழா மே 30ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு மனிதனை மனிதன் சுமப்பதா எனக் கூறி, திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதி. அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்திருந்தார்.
இதையும் படிங்க:சூலூரில் படுகள திருவிழா.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்