மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், செம்பனார்கோவில் கலைமகள் கல்விக் குழுமத்தின் தாளாளர் கொடியரசு மற்றும் சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் வினோத், ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரைக் கைது செய்து மயிலாடுதுறையில் உள்ள கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.