உதகமண்டலம்:சீனாவில் உருவான HMPV தொற்றால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட எல்லையான கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.
இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து நாள்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீலகிரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.