சென்னை:கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், ரேஸ் கிளப் நிர்வாகம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகையை வட்டியுடன் வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டி ரேஸ் கிளப் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்ப்பாட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிலையில், இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை அரசு ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானமாக்க கோரியும், இதில் ஏழை எளிய மக்களுக்கான குடியிருப்புகளை அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.