ஓசூர்:சிட் ஃபண்ட் துறையில் நம்பகத்தன்மையுடன், முன்னணி நிறுவனமாக திக்ழ்ந்து வரும் 'மார்கதர்சி சிட் ஃபண்ட் தனது 120வது கிளையை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இன்று திறந்துள்ளது.
ராமோஜி குழுமத்தின் மார்கதரிசி சிட்ஸ் நிறுவனம் 62 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சேவை செய்துவரும் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம், இன்று (டிச.11) தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமது புதிய கிளையை திறந்துள்ளது.
புதிய கிளையை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் அவர்கள் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தார். இதன் மூலம் நான்கு மாநிலங்களில் மொத்தம் 120 கிளைகளாக நிறுவனம் விரிவடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை 11 மணியளவில் கர்நாடகா மாநிலம் கெங்கேரியில் மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனத்தின் 119 வது கிளை திறக்கப்பட்டது.
புதிய கிளை திறப்பு விழாவில் ஒசூர் மேயர் சத்யா, ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஒசூர் துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திருமதி செருகுரி சைலஜா கிரண் அவர்கள்:
ஒசூரை ஆங்கிலேயே காலத்தில் குட்டி இங்கிலாந்து என அழைத்தனர். அதற்கு காரணம் ஒசூர் பகுதி எப்போதும் குளிர்ந்த பகுதியாக இருக்கிறது. ஒசூரை ரோஜா நகரமென்றும் அழைக்கிறார்கள்.