தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கும் கோடை விழா.. மே 1 முதல் உதகை நகருக்குள் கடும் போக்குவரத்துக் கட்டுப்பாடு! - Nilgiris route change - NILGIRIS ROUTE CHANGE

Nilgiris route change: உதகை சீசனுக்காக அத்தியாவசிய வாகனங்கள் தவிர, அனைத்து கனரக வாகனங்களும் கோடை விழாவான மே 1 முதல் 31 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உதகை நகருக்குள் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 4:20 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மே மாத கோடை விழாவின் போது, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து, இங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்து செல்வர். இந்த காலகட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிகம் இருப்பது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு, தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ஸ்டீபன் சர்ச் சாலை, கூடலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவின் தலைமையில், சமூக ஆர்வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலலகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் சுற்றுலா வாகனங்களை கட்டண அடிப்படையில் நிறுத்துவதன் மூலம், பார்க்கிங் பிரச்னைக்கு சற்று தீர்வு காண முடியும்.

இதே போன்று மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் கார்களை பார்க்கிங்கில் நிறுத்துவதற்குப் பதிலாக, ஒரு மாத காலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து சென்றால், அந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தும் போது, மார்க்கெட் வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பு இருப்பதால், அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், கோடை விடுமுறையின் போது சுற்றுலா வரும் வாகனங்கள் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, சர்க்யூட் பேருந்துகளில் சென்று வரும்போது ஓரளவுக்கு போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், நகரத்தின் எங்கெங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதோ, அந்த பகுதியில் எல்லாம் உள்ளூர் காவலர்கள் துணையோடு, வெளியூர் காவலர்களும் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை உடனுக்குடன் சீர் செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தெரிவித்துள்ளார்.’

இதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக இன்று மற்றும் நாளை மற்றும் கோடை விழாவான மே 1 முதல் 31 வரை ஒரு வழிப்பாதையில் அனுமதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.

மேலும், உதகை சீசனுக்காக ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் பேரில், அத்தியாவசிய வாகனங்கள் தவிர (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) அனைத்து கனரக வாகனங்களும் இன்று மற்றும் நாளை மற்றும் கோடை விழாவான மே 1 முதல் 31 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உதகை நகருக்குள் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்! - WEATHER UPDATE

ABOUT THE AUTHOR

...view details