தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக பிரதமர் பேச்சு உள்ளது” - ஜவாஹிருல்லா கருத்து! - M H JAWAHIRULLAH - M H JAWAHIRULLAH

M.H. Jawahirullah: மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் பேசியுள்ளது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது என்றும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா பேட்டி
ஜவாஹிருல்லா பேட்டி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 7:28 PM IST

திருச்சி:மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ மற்றும் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

ஜவாஹிருல்லா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது, “மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 இடங்களில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும். 10 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

போதைப் பொருள் விவகாரத்தில் அதிகமாக விழிப்புணர்வையும், சட்ட நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி உரையாற்றினார். இது அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு எதிராகவும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வக்ஃபு நிலங்களை ஆக்கிரமிக்க வக்ஃபு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். எதிர்ப்பின் காரணமாக அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், மோடி மதச்சார்பற்ற சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசிய உரை பிரதமரின் உரையாக இல்லாமல், அரசியல் கட்சி தலைவரின் உரையைப் போல் உள்ளதாக முக்கிய ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன. இந்தியா கூட்டணி இதனை எதிர்க்க வேண்டும்.

தமிழ் வெல்க என்ற கலைஞரின் சொந்த கையெழுத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது தமிழக மக்களின் வெற்றியாக உள்ளது. அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில், திமுகவின் ஆட்சியில் 3 வருடத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு குறைவாக உள்ளது. முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து மக்களுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தலித்துகள் முதல்வராக முடியாது என்று திருமாவளவன் பேசிய பேச்சின் ஒரு வாசகத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதனை பரப்புரை செய்வது தவறு. தமிழ்நாட்டில் தலித்துகள் அதிகளவில் உள்ளனர். அவர்களில் ஒருவர் முதலமைச்சராக முடியும். அதனை வரவேற்போம்” என்றார். இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, மமக இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாஜக அரசு பட்டாசு தொழிலுக்கும் வெடி வைத்துள்ளது.. எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details