சென்னை:கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (34). இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை, மிரட்டுதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்காக தேடி வந்தனர். ஆனால், பிரேம்குமார் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடவும் திட்டம் தீட்டியுள்ளதாக நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், பிரேம் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 27) சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.