தஞ்சாவூர்:தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இவரை படுகொலை செய்தவர்கள் தலையை துண்டித்து உடலை ரயில் தண்டவாளத்திலும், தலையை அதேப் பகுதியில் உள்ள கோயில் வாசல் முன்பாகவும் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், சதீஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தஞ்சை கோர்ட்டில் கடந்த பிப்ரவ்ரி 13ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் சஷீத் குமார் கோர்ட்டில் ஆஜராகி வீட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது சதீஷ்குமாரின் நண்பர் ஒருவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரை காண தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சதிஷ்குமார் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் நண்பர்கள் சிலர் மருத்துவக்கல்லூரியில் சதிஷ்குமார் பார்த்துள்ளனர். அவர்கள் சதீஷ்குமாரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அருகில் உள்ள கடைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.