கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “வங்காளதேச நாட்டுடன் நீண்ட நெடிய உறவு நமக்கு இருந்தது. மதவாத சக்திகளின் கை ஓங்கும் போதெல்லாம் நம்முடைய உறவுக்கும், நெருக்கத்துக்கும் சவால் வருகிறது. இதை எதிர் கொள்ளும் நிலையில் இருக்கின்றோம்.
உலக அமைதிக்கு வங்காளதேசம், இந்திய உறவு மிக முக்கியமானது. நிச்சயமாக மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தமிழக அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் போட்டிகளை சமாளிக்க முடியாது. நிறைய உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். உலகம் முழுவதும் ஜவுளித்தொழில் வளர்ந்து வருகின்றது.
வங்காள தேசத்தில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளி தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளித் தொழில் புதிய எழுச்சியை பெற்றுள்ளது.இந்தச் சூழலில் நம் பகுதியை விட்டு இந்த தொழில்கள் வேறு நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது. இதை தவிர்க்க மாநில அரசு ஐவுளி துறை சார்ந்தவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க வேண்டும். கஞ்சா நடமாட்டமென்றால் கஞ்சா அதிகமாகிவிட்டது என பொருள் கொள்ளக்கூடாது.