தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது, அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம். உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறும்.
அதேபோல், இந்த ஆண்டும் மகா சிவராத்தி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் என இரண்டுமே ஒரே நாளில் வந்ததால், கடந்த சில தினங்களாக தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 8) மகா சிவராத்திரி என்பதால், இரவு தொடங்கி அதிகாலை வரை பெருவுடையாருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், கனி வகைகள் மற்றும் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் 4 கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.