மதுரை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே 'அல்லவை அழிந்து நல்லவை பெருக வேண்டும்' எனக் கூறப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், மதுரையிலும் தீபாவளி திருநாள் களைகட்டியுள்ளது.
தொடர் மழை, வெள்ள பாதிப்புகள் மதுரையில் இருந்த போதும் கூட தீபாவளி திருநாள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதலே பரவலாக அதிர்வேட்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: பறவைகளுக்காக 18 ஆண்டுகளாக பட்டாசு இல்லாமம் தீபாவளி.. ஈரோடு அருகே வியக்க வைக்கும் கிராமங்கள்!
இந்நிலையில், மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கவிதா கூறுகையில், "தீபாவளியை முன்னிட்டு அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் செய்த பிறகு பலகாரங்கள் குறிப்பாக ஒக்கோரை என்ற இனிப்பு பதார்த்தம் எங்கள் வீட்டின் சிறப்பு. அதனை சாப்பிட்ட பிறகு தற்போது வெடி வெடித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பாக வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு உடை அணிந்து எனது குழந்தைகள் மிக சந்தோசமாக புத்தாடை அணிந்து வெடி வெடித்து மகிழ்கிறார்கள். இந்த நன்னாளில் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என்றார்.
மதுரையைச் சேர்ந்த பொதுமக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதுகுறித்து சிறுமி மனஷ்வினி கூறுகையில், "தீபாவளி என்றால் எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையாகும். பட்டாசு வெடிப்பது என்றால் சற்று பயமாக இருக்கும். இருந்த போதும் இந்த தீபாவளிக்கு சரவெடி, ஆட்டோ பாம் லட்சுமி வெடி என அனைத்தையும் அண்ணனோடு இணைந்து வெடித்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (vETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்