மதுரை :மதுரைக்கு வருகை தருகின்ற அல்லது மதுரையை கடந்து செல்கின்ற ரயில் பயணிகள், இனிமேல் ரயில் நிலைய நடை மேடையிலேயே மதுரையின் சிறப்பு வாய்ந்த மல்லிகை பூவை வாங்கி செல்லும் வகையில் மதுரை ரயில்வே கோட்டம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" என்ற தலைப்பின் கீழ் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரை கோட்டத்தில் 35 ரயில் நிலையங்களில் உள்ள 44 விற்பனை நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விற்பனை நிலையங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வந்து, பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் அந்தந்த ஊர் தயாரிப்புகளை எளிதில் வாங்கும் வகையில் நடைமேடைகளில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.