தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாசில்தாரை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்பட 17 பேர் விடுதலை.. மதுரை நீதிமன்றம் உத்தரவு!

M.K.Alagiri: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நீதிமன்றம்
மு.க.அழகிரி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 1:34 PM IST

Updated : Feb 16, 2024, 1:51 PM IST

மு.க.அழகிரி விடுதலை

மதுரை: கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில், மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று, வீடியோ எடுத்தனர்.

இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாக தாசில்தார் காளிமுத்து, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (பிப்.16) விசாரணைக்கு வந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விரைவில் மேகதாது அணை கட்ட நடவடிக்கை.. கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா தகவல்!

Last Updated : Feb 16, 2024, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details