மதுரை: மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக என் மீதும் புகார் எழுந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறாத நிலையில், என் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.