மதுரை:தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, பிள்ளையார்குளத்தில் அமைந்துள்ள வட பத்திர காளியம்மன் திருக்கோயிலில் வழிபாடு செய்ய, இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, வட்டாட்சியர் கோயிலை பூட்டி சீல் வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஒரு பிரிவினர் வருவாய்த்துறை கோயிலில் வழிபாடு மேற்கொள்ள விதித்த தடையை நிறுத்தி வைத்து, உடனடியாக கோயிலில் வழிபாடு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
“வழிபாடு நடத்தும் பக்தர்களின் உரிமையை அரசு அதிகாரிகள் பறிக்க முடியாது” - உயர் நீதிமன்றக்கிளை! - சீல் வைத்த கோயிலை திறக்க உத்தரவு
Sankarankoil temple case: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இரு பிரிவினர் இடையேயான மோதலைத் தடுக்க கோயிலை பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், வருவாய்த் துறையினரின் உத்தரவை ரத்து செய்து கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Published : Mar 7, 2024, 7:53 PM IST
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கோயிலை பூட்டி சீல் வைத்த அதிகாரிகளின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மனிதரின் வழிபாடு நடத்தும் பக்தர்களின் உரிமையை அரசு அதிகாரிகள் பறிக்க முடியாது” என கருத்து தெரிவித்து, உடனடியாக கோயிலை பூட்டி வருவாய்த்துறை வைத்த சீலை அகற்ற வேண்டும் என வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அஜித்குமாருக்கு ஸ்கேன்? - வெளியான முக்கிய அப்டேட்!