மதுரை:வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நவ.2ஆம் தேதி துவங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து, 7வது நாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கந்த சஷ்டி விழாவின் போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனமாக ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூல் செய்கிறார்கள். அதே கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில், கட்டணமின்றி தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்துள்ளார்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டு கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000, விஸ்வரூப தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.2,000 மற்றும் அபிஷேகம் தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3,000 வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை திருத்தப்பட்ட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டு கந்த சஷ்டியின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. விரைவு வரிசை தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூல் செய்தனர். பக்தர்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். சுமார் 200 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது.
இதையும் படிங்க :“சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்” - உயர் நீதிமன்றம் கருத்து!