மதுரை:நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் என்னை கைது செய்தனர். பின்னர், நீதிபதி சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை செய்தனர்..
கைது செய்யப்பட்டதற்கு எஸ்.பி. வருண்குமார் தான் காரணம் எனவும், விமர்சனங்களை சீமான் முன்வைத்திருந்தார். சமூக வலைத்தளங்களில் மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக வருண்குமார் எஸ்.பியால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.