மதுரை: காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது இறந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அப்போதைய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்துவதற்காக விமான நிலையம் வந்து மரியாதை செலுத்தி விட்டு திரும்பும்போது பாஜகவினர் சிலர் அமைச்சர் கார் மீது செருப்பு வீசினர்.
இந்த சம்பவம் குறித்து 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவைச் சேர்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தார். அப்பொழுது நீதிபதி, ஒரு அமைச்சர் தேசியக்கொடியை காரில் பொருத்தி பயணிக்கும் போது அவரது வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் என்பது தேசியக்கொடியை அவமதிக்கும் செயலாகும்.