தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு! - தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978

Annulment of the New Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து 1978ஆம் ஆண்டின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக நிதித்துறை செயலாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-high-court-directed-finance-secretary-to-file-a-reply-in-case-seeking-cancellation-of-new-pension-scheme
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நிதித்துறை செயலாளர் பதிலளிக்க மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 5:01 PM IST

மதுரை:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும், புதிய ஓய்வூதியத் திட்டமே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினர். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகிய அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பறித்துவிட்டனர்.

எனவே, தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 மற்றும் தமிழ்நாடு பொது வருங்கால வைப்பு நிதி விதிகளில் மேற்கொண்ட திருத்தத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:உள்ளாடையில் ஒழித்து தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்கள்.. கடத்தல் ஆசாமியை தேடும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details