மதுரை:தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது . பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன்படி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள வீடு மற்றும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி, மதுரை விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன், ஆகியோர் ஜேசிபி வாகனங்களுடன் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
இதையும் படிங்க:அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மறியல்