தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் நீரின் தரம் குறித்து பயின்றுவிக்கும் படிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - Madras IIT - MADRAS IIT

Madras IIT: சென்னை ஐஐடியில் நீரின் தரம் குறித்து அறிவது தொடர்பான 4 மாத படிப்பிற்கு ஜூலை 20 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீரின் தரம் குறித்த போஸ்டர்
நீரின் தரம் குறித்த போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 6:12 PM IST

சென்னை:சென்னை ஐஐடி இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள
கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை (KMCH-RF) ஆகியவற்றுடன் இணைந்து நீரைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நீரின் தரம் குறித்து பயின்றுவிக்கும் படிப்பை வழங்குகிறது.

என்பிடெல் (NPTL) ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் ஹைபிரிட் (HYBRID) முறையில் வழங்கப்படும் இந்த நான்கு
மாத கால பாடநெறி, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும், நீர் தரத்தில் ஆர்வம் கொண்ட தொழில்நுட்ப பின்னணி உடையவர்களுக்கும் ஏற்றதாகும்.

மாணவர்களைக் கொண்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் நீர் வரைபடத்தை உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்திற்குப் பின் ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவர்கள் நடத்துவர்.

பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்த சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை https://bit.ly/3zgpkMy என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நீரின் தரத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம்.

சென்னை ஐஐடி வேதியியல் துறையின் நிறுவன பேராசிரியர் பிரதீப் கூறும்போது, "ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, அதற்கான காரணங்களை மக்கள் புரிந்துகொள்ளும் போதுதான் சாத்தியமாகும்.

அத்தகைய அம்சங்களில் நீரின் தரத்தை அறிந்து கொள்வதும் ஒன்று. மக்களுக்கு நம்பிக்கையான நீர் தரம் குறித்த தரவை இந்த பாடநெறி உருவாக்கும். இந்த உலகிற்காக நீர் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியின் மூலம் மக்களை நீர் பற்றிய புரிதலைக் கொண்டவர்களாக மாற்ற இயலும்.

மக்களின் நீர் தரவுக்கான அணுகுமுறை என தலைப்பிடப்பட்ட இந்த பாடநெறியின் மூலம் நீரின் தரம், முக்கிய அளவுருக்கள் குறித்த பகுப்பாய்வு, மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் பற்றிய விரிவான புரிதலை வழங்கும்.

வீடுகள், ஆறுகள், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர், குழாய் நெட்வொர்க்குகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து நீரின் தரத்தின் தரவுத்தளத்தையும் இதனால் நிறுவ முடியும். இப்படிப்பிற்கான வகுப்புகள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் அல்லது பதிவு செய்யப்பட்ட வடிவில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

பாடத்திட்டத்தை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளது குறித்து ஆன்லைன் அசைன்மெண்ட்கள், கேள்வி - பதில்கள் மூலம் கண்டறியப்பட்டு மதிப்பிடப்படும். செய்முறை அமர்வுக்கு பதிவு செய்பவர்கள் கையடக்க கருவிகள் மற்றும் கள சோதனைக் கருவிகள் போன்றவற்றுடன் களத்திலும், ஆய்வகத்திலும் அளவீடுகளை மேற்கொள்வார்கள்.

ஆய்வு செய்யப்பட்ட நீரின் தர அளவுருக்களில் குளோரின் இன்மை, மொத்த குளோரின், காரத்தன்மை, pH, ஆக்சிஜனேற்றம் - குறைப்பு திறன் (ORP), கடத்துத்திறன், மொத்தம் கரைந்த திடப்பொருள்கள் (TDS), வெப்பநிலை போன்ற விவரங்களை அறிய முடியும்.

பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் செய்முறை அமர்வுகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட இடத்திலிருந்து பல்வேறு பங்கேற்பாளர்கள் பதிவுசெய்து, மக்களின் நீர் தரவை உருவாக்குவதில் பங்களிப்பது அவசியமாகிறது. செய்முறை அமர்வுக்கான மையமாக மாறுவதற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் கைகோர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன” என்று பிரதீப் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு! - Tamilnadu gutkha scam case

ABOUT THE AUTHOR

...view details