சென்னை: மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சமீபத்தில் ஓசூர், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில், மீண்டும் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் இறந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் காலதாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.
அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கூறும் போது, யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டுவிட்டது. நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளன.