புதுச்சேரி:புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றிய ஆனந்தன், 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், ஆனந்தனின் மனைவி மற்றும் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அசோக் ஆனந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களுக்கு எதிரான வழக்கை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணையில் இருந்த போது ஆனந்தி மனைவி மரணம் அடைந்தார். அவருக்கு எதிரான வழக்கு மட்டும் கைவிடப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்த் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அரசு அதிகாரி ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.