தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் ரோடு ஷோ; குழந்தைகளை அழைத்து வந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! - PM Modi Coimbatore Road show - PM MODI COIMBATORE ROAD SHOW

PM Modi Coimbatore Road show case: பிரதமரின் ரோடு ஷோவுக்கு குழந்தைகளை அழைத்து வந்ததாக தொடரப்பட்ட வழக்கில், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

mhc-said-dont-take-coercive-actions-against-school-management
பிரதமர் கோவை ரோட் ஷோ; குழந்தைகளை அழைத்து வந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சென்னை நீதிமனறம் அறிவுறுத்தல்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 6:52 PM IST

சென்னை: கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு, பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கோவையில் மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை புகழ் வடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பிரதமர் நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாக கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். மேலும், அதுவரை பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என நீதிபதி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு.. சென்னை ஒரு சவரன் எவ்வளவு? - Today Gold And Silver Rate

ABOUT THE AUTHOR

...view details