தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு; கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு! - Vikravandi By Election

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனுவை ஏற்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவரின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 7:26 PM IST

Vikravandi
விக்கிரவாண்டி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து, தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி துவங்கிய வேட்புமனுத் தாக்கல் 21ஆம் தேதி முடிவடைந்தது.

இதில், இந்த தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த சிவகங்கையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், தனது வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் ராஜமாணிக்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண மனுக்களில் குறைபாடுகள் இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் எனவும், தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எந்த நிவாரணமும் வழங்காமல் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பானை சின்னத்திற்கு 4 பேர் போட்டா போட்டி.. பாமக, நாதக-வுக்கு என்ன சின்னம்?

ABOUT THE AUTHOR

...view details