சென்னை: தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானது செய்யப்பட்டது.
இதனை அடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சாட்சியம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த குற்றசாட்டு பதிவை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முதல் குற்றவாளியாகவும், அதற்கு அடுத்தபடியாக இயக்குநர் சசிகலாவையும் விசாரணை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
ஆனால், குற்றச்சாட்டு பதிவின்போது சசிகலாவை முதல் குற்றவாளியாக மாற்றி நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.