சென்னை: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்விச் சாராத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, புதுவை மக்கள் தமிழ் வளர்ச்சி சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஆசிரியர்களை வேறு பணிக்கு அனுப்புவதால், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மொத்தம் 54 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாரா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:சென்னை ரிசர்வ் வங்கியில் ஒலித்த அலாரம்.. தோட்டாவுடன் தயாரான பெண் காவலர்.. அடுத்து நடந்த பரபரப்பு!