தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! - RK Selvamani defamation case

Director R. K. Selvamani: இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மீது சினிமா பைனான்சியர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 10:43 PM IST

சென்னை: கந்து வட்டி புகாரில் கடந்த 2016ஆம் ஆண்டு சினிமா பைனான்ஸ்சியர் முகுந்த் சந்த் போத்ரா கைது செய்யப்பட்டார். அப்போது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தனர்.

இதை அடுத்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த் சந்த் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ககன் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார். இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.கே. செல்வமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி T.V. தமிழ்ச்செல்வி முன்பு இன்று (பிப்.27) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க:"மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details