தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாடலாசிரியர் சினேகன் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Actress Jayalakshmi

singer snehan: பாடலாசிரியர் சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Snehan
பாடலாசிரியர் சினேகன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 8:33 PM IST

சென்னை:பாடலாசிரியர் சினேகன் நடத்தி வரும் "சினேகம் அறக்கட்டளை" பெயரை கூறி பொது மக்களிடம் பணம் வசூலித்ததாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது மோசடி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியாக கூறி சினேகன் மீது ஜெயலட்சுமியும் புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று (பிப். 6) விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆஜராகி, தனது "சினேகம் பவுண்டேஷன்" என்ற பெயரை ஜெயலட்சுமி தான் தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாகவும், சினேகன் மீது பொய்யாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இதனையடுத்து சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செயப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details