சென்னை:தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி, சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி, தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றியமைக்கப்படவில்லை என கூறியுள்ளார். இந்த சட்டத்தின் படி, 2022ஆம் ஆண்டிலேயே மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றி அமைத்திருக்க வேண்டிய நிலையில், இன்னும் அந்த பணிகள் செய்து முடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.