தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம்! - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

SSTA Protest Case: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SSTA Protest Case
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 2:52 PM IST

சென்னை:ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக, மாணவ - மாணவியரின் பள்ளிப் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த மாலினி என்ற பெற்றோர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முன்னதாக பள்ளி விடுமுறை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், தற்போது வேலை நாட்களில் போராடுவதால், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கியுள்ள நிலையில், ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் மார்ச் 8ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், மேற்கொண்டு எந்த உத்தரவும் வழக்கில் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு.. நடிகை கஸ்தூரி கூறும் காரணங்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details