தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடையூறாக இருக்கும் அம்மா உணவகங்கள்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு! - Ashok Nagar Pavement issue - ASHOK NAGAR PAVEMENT ISSUE

GCC: சென்னை அசோக் நகர் மற்றும் கே.கே.நகர் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்கள், மின்வாரிய பெட்டிகள் மற்றும் பொது கழிப்பிடங்களை அகற்றக்கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

GCC
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உயர் நீதிமன்றம் (Credits - GCC 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 9:17 PM IST

சென்னை: சென்னை கே.கே.நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அம்மா உணவங்கள், பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இந்த கட்டுமானங்கள் காரணமாக பள்ளி மாணவிகள், பாதசாரிகள் செல்ல வழி ஏதும் இல்லை என்றும், இது குறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்ததாகவும், இருப்பினும் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வு, மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்னை மிக முக்கியமான பிரச்னை எனக் கூறி, மனுவிற்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க:ரூ.75 கோடியில் ரிப்பன் கட்டத்தில் புதிய மாமன்ற கூடம்:அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details