சென்னை: நில அபகரிப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தங்களது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமா என்பவர், தங்களது நிலத்துக்கும் சேர்த்து பட்டா கோரியுள்ளார். இதனை எதிர்த்து தாசில்தாரரிடம் அளித்த புகார், வருவாய் அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி தலையிட்டதால், தங்களது நிலத்தை பிரேமாவுக்கு சாதகமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, திமுக எம்எல்ஏ நல்லதம்பியை எதிர் மனுதாரராக இணைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் நல்லதம்பியை இணைத்து மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.